2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் நாளை ஆரம்பம்

Kogilavani   / 2014 மார்ச் 09 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா நாளை (10) காலை விளக்கு வைத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து எதிர்வரும் 17 ஆம் திகதி பொங்கலுடன் நிறைவடையவுள்ளது.

விளக்கு வைத்தலைத் தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி புளியம்பொக்கனைப் பிரதேசத்தில் விளைந்த நெல் மற்றும் தானியங்களை மாட்டுவண்டியில் யாழ்ப்பாணம், தென்மராட்சி, புத்தூர் சந்திகளுக்கு எடுத்துச் சென்று அங்கே அவற்றைக் கொடுத்து, 17 ஆம் திகதி பொங்கலுக்குரிய பண்டங்களை அப்பிரதேசங்களிலிருந்து எடுத்து செல்கின்ற மரபு பேணப்படுகின்றது.

அதேபோன்று நாளை (10) விளக்குவைத்தலினைத் தொடர்ந்து பண்டம் கொடுத்து பண்டம் எடுத்து வரும் மரபு முறை இடம்பெறவுள்ளது.
மேற்படி ஆலயத்தில் திருவிழாவினையொட்டி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

இதனால் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பேரூந்து போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், பாதுகாப்பு, ஆலய சூழல் துப்பரவு செய்தல், வாகனங்கள் பாதுகாப்பு, வியாபார நடவடிக்கைகள், கழிவகற்றல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கண்டாவைள பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பிற்கென 800 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் உங்கள் உடமைகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுமாறும் கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி எட்மன் மகேந்திரா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .