2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

மாதகலில்..

Kanagaraj   / 2014 பெப்ரவரி 16 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாதகல் கடற்கரை லூர்து கெவி அன்னை யாத்திரைத் திருத்தலத்தின் 75 ஆவது ஆண்டு ஜுபிலி விழா இன்று ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. காலை 7 மணிக்கு யாழ்.மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் அதி வண.தோமஸ் சவுந்தரநாயகம் தலைமையில் ஜுபிலிப்பெருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று மாலை புனித தோமையார் ஆலயத்திலிருந்து அலங்காரத்தேரில் அன்னையின் திருச்சொரூபம் பவனியாக எடுத்துவரப்பட்டு லூர்து கெவியில் நற்கருணை வழிபாடுகள் நடைபெற்றன. 

அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய அன்னை திருச்சோரூபப் பவனி  நேற்று மாலை புனித தோமையார் ஆலயத்திலிருந்து ஆரம்பித்து புனித அந்தோனியார், புனித செபஸ்ரியார் ஆலயங்களைக் கடந்து லூர்து கெவியைச் சென்றடைந்தது.

எமிலியாட் என்ற பாதிரியார் 1938 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18 ஆம் திகதி முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்துத் திறந்து வைத்தார். 1939 ஆம் ஆண்டிலிருந்து மாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது.


பிரான்ஸ் நாட்டின் லூர்து என்னும் இடத்திலுள்ள மசபியல் என்ற குகையில் விறகு பொறுக்க வந்த மூன்று சிறுவர்களுக்கு தூய அன்னை காட்சி கொடுத்த சம்பவத்தை காட்சி அமைப்பாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஜுபிலி ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜுபிலி மலர் யாழ் மாவட்ட ஆயரினால் வெளியிடப்பட்டதுடன் இத்திருத்தலத்தின் பின்புறமாக கடலின் நடுவே சுமார் 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட அன்னையின் திருச்சொரூபம் திறந்து வைக்கப்பட்டது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .