2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு

Kogilavani   / 2013 நவம்பர் 21 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய்க்காப்பு வைக்கும் இரண்டு நாள் நிகழ்வில் முதலாம் நாள் நிகழ்வு நேற்று புதன்கிழமை பிரதிஷ்டா வித்தகர் கிரியாக்ரமஜோதி பிரம்மஸ்ரீ இலஷ்மீகாந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வின் முதலாம் நிகழ்வு நேற்று புதன்கிழமையும், இரண்டாம் நாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமையும் இடம்பெற்று நாளை வெள்ளிக்கிழமை மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
 
முதலாம் நாள் எண்ணெய் வைக்கும் நிகழ்வில் சிறுவர் முதல் பெரியோர் வரை ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் வகையில் இறைவனுக்கு எண்ணெய் சாத்தினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .