2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பாற்குட பவனி

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்றயதினம் (19) சங்காபிஷேகமும் பாற்குட பவனியும் இடம்பெற்றது.

ஆலயத்தில் 1008 சங்குகள் வரிசையாக அடுக்கப்பட்டு பின்னர் யாக பூஜை நடைபெற்று மூலமூர்த்தியான ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாருக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதற்கு மேலாக களுமுந்தன்வெளிக் கிராமத்திற்கு சுமார் 4 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சுரவணையடியூற்று கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து பாற்குடம் ஏந்தி பக்தர்கள் கால்நடையாக சென்று களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயதிற்குச் சென்றடைந்தனர்.

பின்னர் களுமுந்தன்வெளி மூலமுர்த்தியான ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

களுமுந்தன்வெளி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிரியைகள் மற்றும் அபிஷேக நிகழ்வுகள் யாவும் சிவ ஸ்ரீ சுப்பிரமணியக் குருக்கள் அவர்கள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .