Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 திருத்தலங்களின் மூலப் பெருமானையும் ஒரே தலத்தில் தரிசித்து அருள்பெறும் மகத்தான வாய்ப்பை இலங்கை வாழ் மக்களுக்கு பிரம்மகுமாரிகள் இராஜ யோகம் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.
மக்கள் பிணி தீர்க்க வல்ல மகிமைவாய்ந்த சோமநாதர், நாகேஸ்வரர், கேதாரநாதர், விஷ்வநாதர், மகா காளேஸ்வர், ஓங்காரேஸ்வர், திரியம்பகேஸ்வரர், கிருஷ்னேஸ்வரர், வைத்தியநாதர், பீமா சங்கர், மல்லிகார்ஜுன், இராமேஸ்வரம் ஆகிய பாரதத்தின் பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த 12 ஜோதிலிங்கங்களை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை 112, பழைய நீர்கொழும்பு வீதி, வத்தளை எனும் முகவரியில் (ஸ்ரீ லங்கா ரெலிகொம் அருகில்) காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை தரிசிக்கும் பாக்கியம் மக்களுக்குக் கிட்டியுள்ளது.
அத்துடன், ஆத்மா, பரமாத்மா, நாடகச் சக்கரம் பற்றிய பட விளக்கக் கண்காட்சியை அடியார்கள் பார்வையிடுவதற்கும் தங்கள் மனக் கவலைகளை திரிமூர்த்தி சிவபரமாத்மாவிடம் கொடுப்பதற்காக ஒரு யாக குண்டமும் சிறிது நேரம் அமர்ந்திருந்து தியானத்தின் மூலம் எம்பெருமானை அனுபவம் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முற்றிலும் இலவசமான இந்நிகழ்வில் மும்மொழிகளிலும் விளக்கங்கள் வழங்கவுள்ளதனால் இன, மத, மொழி பாகுபாடின்றி அனைவரும் கலந்துகொள்ளுமாறு பிரம்மகுமாரிகள் இராஜ யோகம் நிலையத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலதிக விவரங்களுக்கு: 011-2717572 , 011-2344106, 011-2943243.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago