2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

சேனைக்குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை சேனைக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்திப் பெருவிழா வியாழக்கிழமை (10) நடைபெறவுள்ளது.

இதனைமுன்னிட்டு செவ்வாய்க்கிழமை (08) எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வும் வியாழக்கிழமை(10) கும்பாபிஷேக பெருவிழாவும்  நடைபெறவுள்ளன.

சிவகாம வித்யா பூஷணம்,சிவாச்சார்ய திலகம்,கிரியா காலமணி,கிரியா சாகரர்,ஜோதிட தத்துவ நிதி,விபுலமணி பிரதிஸ்டா பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள இக்கும்பாபிஷேக கிரியைகளில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பல அந்தணர்கள் வருகை தரவுள்ளனர்.

இதேவேளை,எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சங்காபிஷேகம் நடைபெற்றவுள்ளமை.
குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .