Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2018 மார்ச் 23 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
புசல்லாவை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த திருவிழா, எதிர்வரும் திங்கட்கிழமை(26) காலை, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
திங்கட்கிழமை காலை 9 மணிக்கு விநாயகர் வழிப்பாடும் அதனைத்தொடர்ந்து கொடிறேற்றமும் காப்பு கட்டுதலும் விசேட பூசைஇடம்பெறும் .
மேலும் மாலை 5 மணிக்கு நித்திய பூஜையும் கிராமசாந்தியும் இடம்பெறும்.
27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு, வியாகர் வழிப்பாட்டுடன் புண்ணியயாகமும் இடம்பெற்று கும்பபூசையும் மாலை 5மணிக்கு விசேட வசந்த மண்ட பூசையுடன் விநாயகர் உள்வீதி வலம்வருதல் இடம்பெறும்.
28ஆம் திகதி காலை 9 மணிக்கு அலங்காரபூசையும் மாலை 5 மணிக்கு நித்திய பூசையைத்தொடர்ந்து மாவிளக்கு பூசை இடம்பெற்று அம்பாள் உள்வீதி வலம்வருதல் இடம்பெறும்.
29ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு நித்திய பூசையும் விநாயகர் வழிப்பாடும் அதனைத் தொடர்ந்து காவடி வலம் வருதலுடன் பாற்குட பவனியும் 1008 சங்காபிசேகமும் இடம்பெற்று, மகேஸ்வர பூசையுடன் அன்னதானமும் வழங்கப்படும்.
மேலும் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு விசேட வசந்த மண்டப் பூஜை இடம்பெற்று, ஸ்ரீ முருகப்பெருமான் ஸ்ரீ அம்பாள் ஸ்ரீ விநாயகப்பெறுமான் உள்வீதி உலா
30 திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு, நித்தியபூசையும் விநாயகர் வழிபாட்டுடன் விசேட பூசையும்இடம்பெறுவதோடு, காலை 7 மணிக்கு பட்டு எடுத்தலும் அதனைத்தொடர்ந்து திருவூஞ்சல் மகேஸ்வரபூசையும் இடம்பெற்று, அலங்கார தேர் புசல்லாவை நகரவீதி உலாவருதல் இடம்பெறும்.
31ஆம் திகதி சனிக்கிழமை காலை 7மணிக்கு, மஞ்சல் நீராட்டு வைபவமும் 10மணிக்கு விநாயகர் வழிப்பாடும் கும்பூசையும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் இடம்பெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago