2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ராஜகோபுர கும்பாபிஷேகம்...

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
 மட்டக்களப்பு, கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ அம்பாறைவில் பிள்ளையார் ஆலய, இராஜகோபுர மஹா கும்பாபிஷேகம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை (19) கும்பாபிஷேகத்துக்கான கிரியை நிகழ்வுகள் காலை 5 மணிமுதல் ஆரம்பிக்கப்படும். சனிக்கிழமை (20), காலை 9 மணிமுதல் மாலை 5மணிவரை எண்ணைய்க்காப்பு சார்த்தும் நிகழ்வு இடம்பெறும். 

ஞாயிற்றுக்கிழமை (21) காலை 9.05 மணி முதல் 10.30 மணிவரையிலான சுபமுகூர்த்த வேளையில், அம்பாறைவில் பிள்ளையார் ராஜகோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதை ஆலயப் பரிபாலன சபையினர் தெரிவித்தனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .