2024 ஒக்டோபர் 18, வெள்ளிக்கிழமை

மலேசியாவில் மகா கும்பாபிஷேகம்

Editorial   / 2024 ஜூலை 04 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியா  தாமான் லோட் 6892  ஜலான் ஹஜி செந்தோசா காப்பார் சிலாங்கூர் அருள்மிகு தேவி ஸ்ரீ காப்பாரூர் ஆதிபராசக்தி ஆலய நூதன புனராவர்த்தன  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா

திங்கட்கிழமை (08) காலை 7 மணிக்கு பூர்வாங்க விக்னேஸ்வர பூஜை, பிரதிஷ்ட மகா சங்கல்பம், கோபுர கலச ஸ்தாபனம், ஸ்ரீ மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை, விபூதி பிரசாதம் வழங்கப்பட்டும்

 செவ்வாய்க்கிழமை 09ம் திகதி ஸ்ரீ லலிதா ஹோமம், புனித மண் எடுத்தல், புனித தீர்த்தம் எடுத்தல், மாலை அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், முதற்கால யாகபூஜை, ஆதிபராசக்தி மந்திர நூல் பாராயணங்கள் இடம்பெறும்

10ம் திகதி புதன்கிழமை காலை பக்தர்கள் சுவாமி பீடங்களின் வெள்ளி, தங்கம், நவரத்தினம் வைத்தல் இடம்பெறும்.

நவரத்ன ஸ்தாபனம், யந்திர ஸ்தாபனம், சுவாமி ஸ்தாபனம், அஷ்டபந்தனம்  பூரணாகுதி, தீபாராதனை விபூதிப்பிரசாதம் அன்றையதினம் மாலை வழங்குதல்.

11 ஆம் திகதி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்துதல், பிராய்ச்சித்த அபிஷேகம், பிம்ப சுத்தி ரக்ஷாபந்தனம்.

12ஆம் திகதி வெள்ளிக்கிழமை  யாக வேள்விவேதம், திருமறை பாராயணங்கள், காலை 10:20 க்கு தேவி ஸ்ரீ காப்பாரூர் அன்னை ஆதிபராசக்தி மற்றும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் ,கோபுர கலசங்களுக்குமான மகா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்று மகேஷ்வர பூஜையினை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு மகா கும்பாபிஷேக பெருவிழா இனிதே நிறைவுபெறும்.

கும்பாபிஷேக கிரியைகள் யாவும் இலங்கை திருநாட்டில் சபரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டம் டேனகந்த அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய பிரதம குரு பிரம்மஸ்ரீ உஷாங்கன் சர்மா தலைமையில் இடம்பெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .