2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மகா கும்பாபிஷேகம்

Freelancer   / 2023 மார்ச் 22 , மு.ப. 03:54 - 0     - 65

மாத்தளை நோர்த் உல்பத் மடவளை ஏ-9 வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய பாலமுருகன் ஆலய நூதன பிரதிஷ்ட மகாகும்பாபிஷேக பூர்வாங்க கிரியைகள் இன்று (22) புதன்கிழமை பிரம்ம ஸ்ரீ க.ஆனந்தகுமாரக்குருக்கள் தலைமையில் ஆரம்பமாகின்றது.

முருக பக்தனான தனது பாட்டனார் கோவிந்தன் மாரிமுத்து தனது சொந்த காணியில் சிறிய வேல் வைத்து காவடி எடுத்து வருடந்தோறும் முருகப்பெருமானை வழிபடுவதை பல ஆண்டுகளாக தனது கடமையாக செய்துவந்துள்ளார். அதே காணியில் தற்போது அவரது மகள் வழிப்பேரன் எஸ். எம். சிவகுமார் முருகப் பெருமானின் திருவருளினால் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய பாலமுருகன் ஆலயத்தை புதிதாக ஆலயத்தை நிர்மானித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .