Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 16, புதன்கிழமை
Kogilavani / 2021 மார்ச் 24 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.இராஜேந்திரன்
புஸ்ஸல்லாவை நாட்டுக்கோட்டை நகரத்தார் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் பங்குனி உத்திர அலங்கார உற்சவம், நாளை மறுதினம் (26) ஆரம்பமாகவுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி என்பன இடம்பெற்று காப்புக் கட்டுதல் இடம்பெறும்.
மாலை 5 மணிக்கு நித்தியப் பூஜை, வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்று சுவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல் இடம்பெறும்.
27ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு அஷ்டோத்திர சங்காபிஷேகம், தீபாரதனை, காவடி பூஜையுடன் மகேஸ்வர பூஜையும் இடம்பெற்று அன்னதானம் வழங்கப்படும்.
அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நித்தியப் பூஜை, பங்குனி உத்தர உபயகாரர் உபயம், வசந்த மண்டபப் பூஜை, சுவாமி உள்வீதி வலம்வருதல் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.
28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, பாற்குட பவனி, வருஷாபிஷேகம், அஷ்டோத்திர 108 சங்காபிஷேகம், தீபாராதனை என்பன இடம்பெற்று மகேஸ்வர பூஜை இடம்பெரும்.
அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நித்தியப் பூஜை, வசந்த மண்டபப் பூஜை, திருப்பொன்னூஞ்சல், சுவாமி உள்வீதி வலம் வருதல் என்பன இடம்பெற்று பிரசாதம் வழங்கப்படும்.
29ஆம் திகதி மாலை இடும்பன் பூஜையுடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவுபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago