Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2021 ஜூலை 27 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சிவவடிவேல். அவர், ஓட்டோ டிரைவர்.
இவருக்கு, கடந்த 6 வருடத்துக்கு முன்பு குழந்தை வடிவில் முருகன் கனவில் வந்து கோவில் கட்டி வழிபாடு செய்ய வேண்டும் என்று சொன்னதாக கூறப்படுகிறது.
அதன்படி தனது வீட்டின் அருகே உள்ள இடத்தில், ராஜா சிவசக்தி வேலாயுதசாமி-அசோகசுந்தரி என்ற கோவிலை அமைத்தார். அந்த கோவிலில் சிலையாக, கருங்கல்லால் வடிவமைக்கப்பட்ட வேல் ஒன்றை வைத்து வணங்கி வருகிறார்.
இந்த கோவிலில் பௌர்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு அவர் அன்னதானம் வழங்கி வருகிறார். சிவவடிவேலின் மகன் விஜயபார்த்தசாரதி (வயது 9). இவன், நவாமரத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால், விஜயபார்த்தசாரதி வீட்டில் முடங்கி கிடந்தான். திடீரென்று ஒரு நாள் சிறுவன், காவி வேட்டி உடுத்தினான். பின்னர் கழுத்தில் உத்திராட்சம் மாலை அணிந்தான்.
இதைத்தொடர்ந்து அவன், தனது வீட்டின் அருகே உள்ள கோவிலை தினமும் சுத்தம் செய்து காலை, மாலை நேரங்களில் சங்கு ஊதி, மணி அடித்து, தீபாராதனை காட்டி பூஜை நடத்தி வருகிறான்.
அவன் பூஜை செய்யும் போது சங்கு ஊதும் சத்தத்தை கேட்டு, காகம் ஒன்று எங்கிருந்தோ பறந்து வருகிறது. அது, சிறிது கூடம் அச்சமின்றி பீடத்தின் மீது ஏறி நின்று வேடிக்கை பார்க்கிறது.
தீபாராதனை முடியும் வரை காத்திருக்கும் அந்த காகம், தினமும் ஒரு பூவை வாயில் கொத்தி செல்கிறது. இதனையறிந்த அப்பகுதி மக்கள், அந்த கோவிலுக்கு வந்து இந்த வினோத காட்சியை பார்த்து செல்கின்றனர்.
சிறுவன் சங்கு ஊதினால் மட்டுமே, அதன் சத்தம் கேட்டு காகம் வந்து செல்வது, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
சித்தர்கள் மீது ஆர்வம்
இது குறித்து சிறுவனிடம் கேட்டபோது, ஊரடங்கால் அரசு பள்ளி திறக்கப்படாததால் டி.வி. பார்ப்பது உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மீது எனக்கு ஆர்வமில்லை. இதனால் வீட்டின் அருகே அமைத்துள்ள கோவிலில் தினமும் சித்தர்களின் பக்தரான எனது தந்தை பூஜை செய்வதை குழந்தையாக இருக்கும்போது பார்த்து வந்தேன்.
எனக்கும், சித்தர்கள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து கோவிலில் பூஜை செய்வதில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது. கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் நிம்மதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதே எனது இலட்சியம் என்றான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
45 minute ago
57 minute ago