2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் மர்மப்பொருள் விழும் அபாயம்?

Gavitha   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

விண்வெளி அல்லது வேற்றுக்கிரகத்தில் இருந்து பூமியை நோக்கி விண்கற்கள், இடையில் சிதறுண்டு அதிலிருந்து சிறிய துண்டுகள் பூமியில் விழுந்து பூமி சேதமடைகின்றது.

இந்நிலையில், வேற்றுக்கிரகத்திலிருந்து பூமியை நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருக்கும் மர்மப்பொருள் ஒன்று, நவம்பர் மாதம் 13ஆம் திகதியன்று பூமியை மோதப்போவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தவிர, இந்த மர்மப்பொருள் ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் தெற்கு பகுதியில் சுமார் 100 கிலோ மீற்றர் தூரத்தில் விழவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மர்மப்பொருள் பூமியை மோதினால், பூமி அழிந்துவிடும் என்றும் புதிய வதந்தியை விஞ்ஞானிகள் கிளப்பியுள்ளனர். இந்த  செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

விண்வெளியில் பல விண்கற்கள் மிதந்தபடி உள்ளன. அவ்வப்போது அவை பூமிக்கு அருகில் வந்து செல்கின்றன. அவற்றில் பெரும்பான்மையானவை வரும் வழியிலேயே எரிந்து சாம்பலாகின்றன. அவற்றில் சில, புவியின் ஈர்ப்புச் சக்தி காரணமாக பூமியில் விழுகின்றன.

இத்தகைய விண்கற்களால் பூமிக்கு ஆபத்து என அவ்வப்போது தகவல்கள் வருவது வழக்கம். தற்போதும் மர்மப்பொருள் ஒன்றினால்  பூமிக்கு ஆபத்து என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த மர்மப்பொருளானது,  வேற்றுகிரகத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

இந்த மர்மப்பொருள் மோதுவதால் உலகம் அழிந்து விடும் என்று  வேற்றுக்கிரகவாசிகள் குறித்து ஆராய்ந்து வரும் இணையதளம் செய்தி  வெளியிட்டுள்ளது. சுமார் 7 அடி நீளமுள்ள அந்த மர்மப்பொருளுக்கு WT1190F என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது நவம்பர் மாதம் 13ஆம் திகதி பூமியை மோதும் அல்லது என்றும்  இந்திய பெருங்கடலில் இலங்கையின் ஹம்பந்தோட்டை கடற்பரப்பில் சுமார் 100 கிலோ மீற்றர் தூரத்தில் விழும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இது குறித்து உலகத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0

  • jethursan Friday, 13 November 2015 04:57 AM

    இது இலங்கையில் கடலில் விழுமா அல்லது நிலத்தில் விழுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .