2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

ஹக்கினையடுத்து 10,000 webcamகளை மீளப்பெறுகிறது சீனாவின் Xiongmai

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 28 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிகப்பெரிய இணையத்தளங்கள் சிலவற்றினை முடக்கிய, கடந்த வாரம் இடம்பெற்ற சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, 10,000 வரையான webcamகளை மீளப்பெறுவதாக சீனத் தயாரிப்பாளரான Hangzhou Xiongmai Technology நிறுவனம், கடந்த செவ்வாய்க்கிழமை (25), அறிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (21), மேற்கொள்ளப்பட்ட புதிய வகை DDoS தாக்குதலில், ஆயிரக்கணக்கான webcamகள், இணையத்துடன் தொடர்புடைய ஏனைய சாதனங்களைக் கட்டுப்படுத்திய ஹக்கர்கள், ஐக்கிய அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இணைய உட்கட்டமைப்பை வழங்கும் Dyn-இல், இணையவழி போக்குவரத்தை ஏற்படுத்தியிருந்தனர். இதனை எதிர்கொள்ள முடியாத நிலையில், PayPal, Spotify, Twitter உள்ளிட்ட இணையத் தளங்களின் இணைப்பு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இலத்திரனியல் சாதனங்களில் சைபர் குற்றவாளிகள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க, என்ன நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கலாம் என, ஐக்கிய அமெரிக்காவின் செனட்டிலுள்ள புலனாய்வு செயற்குழுவின் உறுப்பினர், மூன்று மத்திய முகவரகங்களை வினவியிருந்தார்.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, குறித்த தாக்குதலில் webcamகள் இலக்கு வைக்கப்பட்டது என்று ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்தைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட சில கண்காணிப்புக் கமெராக்களை மீளப்பெறுவோம் என Hangzhou Xiongmai நிறுவனம் தெரிவித்துள்ளது.   

குறித்த தாக்குதலில், 10,000க்கு குறைவான சாதனங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ள Hangzhou Xiongmai நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் Liu Yuexin, 2014ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, அறைகள் அல்லது தனியார் கடைகளைக் கண்காணிக்கும் கமெராக்களே, முதலாவது தொகுதியில் மீளப்பெறப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .