Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 26 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சிறந்த வரவேற்பை பெறும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)தற்போது அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, எதிர்வரும் ஜனவரி 1 ஆம் முதல் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்தவுள்ளதாகவும் புதிய போன்களுக்கு அப்கிரேட் செய்யுமாறு பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது.
கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்பானது சில ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் நிறுத்துகிறது.
தற்போதைய காலத்தில் டிஜிட்டல் தளங்களில் தினமும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
அந்தவகையில், வாட்ஸ்அப் நிறுவனமானது புதிய அம்சங்கள் மற்றும் AI தொழில்நுட்பத்தை கொண்டு புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், தற்போது பழைய ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்கள் என சில மொடல்களில் வாட்ஸ்அப் வேலை செய்யாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போன்கள் வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்களை ஆதரிக்காததால் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்துகிறது.
அந்தவகையில், ஜனவரி 1ஆம் முதல்
Samsung Galaxy S3,
Galaxy Note 2,
Galaxy Ace 3,
Galaxy S4 Mini,
HTC, One X, One X+,
Desire 500,
Desire 601,
Sony, Xperia Z,
Xperia SP,
Xperia T,
Xperia VLG Optimus G,
Nexus 4,
G2 Mini,
L90,
Motorola,
Moto G,
Razr HD,
Moto E 2014, ஆகிய ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் ஆதரவு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .