2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வாட்ஸ்அப் மோசடி அழைப்புகளை அடையாளம் காணும் தொழில்நுட்பம்

Editorial   / 2023 மே 09 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் வரும் மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அடையாளம் காண்பதற்கான தொழில்நுட்பத்தை ட்ரூகாலர் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் ட்ரூகாலர் இதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

ஆன்லைன் வழியே தங்கள் கைவரிசையை காட்டும் மோசடி பேர்வழிகள் குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளத்தின் ஊடாகவும் பயனர்களை அணுகுகின்றனர். அதுவும் அண்மை காலமாக வாட்ஸ்அப் வழியே தொடர்பு கொண்டு மோசடி செய்வது அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் வாட்ஸ்அப் மெசேஞ்சரை மாதந்தோறும் 50 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் ஆக்டிவாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் வாட்ஸ்அப்பில் அதிகரித்து வரும் மோசடி செயல்களை தடுக்கும் நோக்கத்தில் மெட்டா நிறுவனத்துடன் இணைந்துள்ளது ட்ரூகாலர். இதன் மூலம் ஸ்பேம் அழைப்பு மற்றும் மெசேஜை பயனர்கள் எளிதில் அடையாளம் கண்டு, பிளாக் (Block) செய்யலாம். இப்போதைக்கு இது பீட்டா பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் உலகம் முழுவதும் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனை ட்ரூகாலர் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் மாமெதி உறுதி செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X