Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த செவ்வாய்க்கிழமை (05) முதல், தனது அனைத்து பயனர்களின் தொடர்பாடல்களையும் encrypt செய்யப் போவதாக உடனடி தகவல் பரிமாற்றச் சேவையான வட்ஸ்அப் அறிவித்துள்ளது.
இந்த end-to-end encryption மூலம் அனுப்புவரின் சாதனத்திலிருந்து வெளியாகும் குழம்பும் தகவல்கள், பெறுபவரின் சாதனத்தினாலேயே அந்தத் தகவலானது தகவலாக ஒழுங்கமைக்கப்படும். இதன் மூலம் தகவல்கள் இடைமறிக்கப்பட்டால் அதை வாசிக்கமுடியாது. இதனால் குற்றவாளிகளாலோ அல்லது சட்டத்துறை அதிகாரிகளாலோ வட்ஸ்அப் தகவல்கள் இடைமறிக்கப்பட்டால் அவற்றை வாசிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியன் பயனர்களைக் கொண்ட வட்ஸ்அப்பில் அனுப்பப்படும் கோப்புக்கள், மேற்கொள்ளப்படும் குரல் வழி அழைப்புகளும் encrypt செய்யப்படும் என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட தொடர்பாடலை பாதுகாப்பது, தமது அடிப்படையான நம்பிக்கைகளில் ஒன்று என சமூக வலைத்தள ஊடக ஜாம்பவானான பேஸ்புக்கால் நிர்வகிக்கப்படும் வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா துப்பாக்கிதாரி சயீட் பாருக்கினால் பயன்படுத்தப்பட்ட ஐபோனில் உள்ள தரவை கையாளுவதற்கு அப்பிளை உதவுமாறு புலனாய்வு கூட்டாட்சிப் பணியகம் வினவியிருந்த நிலையில், தற்காலத்தில் encrypt முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த மாற்றம் பற்றிய கருத்து தெரிவித்த வட்ஸ்அப், இந்த யோசனை இலகுவானது என்றும் நீங்கள் தகவலொன்றை அனுப்பும்போது அதை பெறுபவரோ குழுவோதான் அதை வாசிக்க முடியுமென்றும் இணையக் குற்றவாளிகள், ஹக்கர்கள், அடக்கு முறையான அரசாங்கங்கள், ஏன் நாங்களும் என எவராலும் அந்த தகவலில் என்ன இருக்கின்றது என பார்வையிட முடியாது என வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
வட்ஸ்அப் செயலியின் இறுதிப் பதிப்பைக் கொண்டிருக்கும் பயனர்கள், கடந்த செவ்வாய்க்கிழமை (05) தகவலை அனுப்பும்போது மேற்படி மாற்றம் பற்றி அறிவுறுத்தப்பட்டதுடன் மேற்படி மாற்றமானது தானாகவே அனைவருக்கும் செயற்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மேற்படி நகர்வானது பேச்சுச் சுதந்திரத்துக்கு கிடைத்த பாரிய வெற்றி என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
21 Apr 2025
21 Apr 2025