2024 நவம்பர் 23, சனிக்கிழமை

வெளியாகியது புதிய iMac

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிளானது, தனது முழு iMac குடும்பத்தையும் இற்றைப்படுத்தியுள்ளது. 21.5 அங்குலம் கொண்ட iMacக்கு முதற்தடவையாக அதிர்ச்சிகரமான புதிய Retina 4K திரையையும், 27 அங்குலம் கொண்ட iMacக்கு Retina 5K திரையையும் கடந்த செவ்வாய்க்கிழமை (13) அறிமுகப்படுத்தியுள்ளது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய Retina திரையின் மூலம், புகைப்படம் மற்றும் காணொளிகளை உயிரூட்டப்பட்டதாக காணமுடியும். தவிர இற்றைப்படுத்தப்பட்டுள்ள iMac களில் மேலும் சக்தி வாய்ந்த processor மற்றும் கிராபிக்குகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு Thunderbolt® 2 port களும் புதிய சேமிப்பக முறைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் அப்பிளானது, புதிய Magic Keyboard™, Magic Mouse® 2, Magic Trackpad® 2 என வயரில்லாமல் இயங்கும் சாதனங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Magic சாதனங்கள் மீள வடிவமைப்பட்டுள்ளதுடன், முன்னொருபோதும் இல்லாத வகையில் சௌகரியமானதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர இவை, மீள மின்னேற்றக்கூடிய மின்கலங்களை கொண்டதாக அமைவதினால், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய மின்கலங்களை மட்டுமே பயன்படுத்தலாம் என்ற முன்னைய முறை இல்லாமல் போகிறது.

தவிர, புதிய Magic Trackpad 2 ஆனது, அப்பிளின் புதிய வலிந்த தொடுகை தொழில்நுட்பத்தை கணனி திரைக்கு கொண்டுவருவதால், iMac அனுபவத்தில் புதியதொரு பரிணாமத்தை வழங்குகிறது.

புதிய Retina 4K திரையுடன் அமைந்த 21.5 அங்குல iMac இல் 4096 x 2304 resolution உம் 9.4 மில்லியன் பிக்ஸல் தெளிவும் கிடைக்கிறது. இது, தற்போதுள்ள 21.5 அங்குல திரைகொண்ட iMac இன் தெளிவை விட 4.5 மடங்கு அதிகமாகும். தவிர 21.5 அங்குல புதிய iMac ஆனது, ஐந்தாவது தலைமுறை Intel Core processor மற்றும் Intel Iris Pro கிராபிக்ஸையும் கொண்டிருக்கிறது.

அடுத்து Retina 5K திரையுடன் அமைந்த 27 அங்குல iMac இல் 14.7 மில்லியன் பிக்ஸல் தெளிவு கிடைக்கிறது. இது HD திரையின் தெளிவை விட 7 மடங்கு அதிகமான பிக்ஸல்கள் ஆகும். தவிர 27 அங்குல புதிய iMac ஆனது, ஆறாவது தலைமுறை Intel Core processor மற்றும் புதிய AMD உயர் பெறுபேறு கிராபிக்ஸையும் கொண்டிருக்கிறது.

தவிர, அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து iMac களும் இரண்டு Thunderbolt 2 port களை கொண்டிருப்பதால், 20Gbps என்ற வேகத்தில் வெளி சேமிப்பகங்களில் இருந்து தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும். தவிர மூன்று வழி 802.11ஏ‌சி Wi-Fi வசதியைக் கொண்டிருப்பதால் 1.3Gbps wireless networking க்கு ஒத்துழைக்கிறது.

புதிய Retina 5K திரையைக் கொண்ட 27 அங்குல iMac ஆனது கடந்த செவ்வாய்க்கிழமை (13) முதல் சந்தைக்கு வந்துள்ளது. இதில் 3.2GHz Processor உடன் 1TB நினைவகத்தை கொண்ட மாதிரியின் விலை 1,799 அமெரிக்க டொலர்களாக உள்ளதோடு, 3.2GHz Processor உடன் 1TB Fusion Drive நினைவகத்தைக் கொண்ட மாதிரி 1,999 அமெரிக்க டொலர்களாக உள்ளதோடு, 3.3GHz Processor உடன் 2TB Fusion Drive நினைவகத்தைக் கொண்ட மாதிரி 2,299 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது.

இதேவேளை 21.5 அங்குல iMac உம் கடந்த செவ்வாய்க்கிழமை (13) முதல் சந்தைக்கு வந்துள்ளதோடு, இதில், 1.6GHz Processor உடன் 1TB நினைவகத்தை கொண்ட மாதிரியின் விலை 1,099 அமெரிக்க டொலர்களாக உள்ளதோடு, 2.8GHz Processor உடன் 1TB நினைவகத்தைக் கொண்ட மாதிரி 1,299 அமெரிக்க டொலர்களாக உள்ளதோடு, 3.1GHz Processor உடன் 2TB நினைவகத்தைக் கொண்ட மாதிரி 1,499 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது.

ஒவ்வொரு புதிய iMac உடனும் புதிய Magic Keyboard,  Magic Mouse 2 இணைந்து வரவுள்ளதோடு, வாடிக்கையாளர்கள் Magic Trackpad 2 ஐ தமது தெரிவாக வாங்க முடியும். தவிர தனியாக Magic Keyboard ஐ 99 அமெரிக்க டொலர்களுக்கும், Magic Mouse 2 ஐ 79 அமெரிக்க டொலர்களுக்கும், Magic Trackpad 2 ஐ 129 அமெரிக்க டொலர்களுக்கும் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .