2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

வெறுப்பு பேச்சை நீக்க பேஸ்புக், டுவிட்டர், யூட்டியூப், மைக்ரோசொஃப்ட் உறுதி

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வழிகாட்டுதல்களின்படி வெறுப்புப் பேச்சை 24 மணித்தியாலங்களுக்குள் நீக்கும் புதிய நடத்தை விதித் தொகுப்பை பேஸ்புக், டுவிட்டர், கூகுளின் யூட்டியூப், மைக்ரோசொஃப்ட் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழு வெளியிட்டுள்ளன.

அண்மையில் ப்ரசெல்ஸிலும் பரிஸிலும் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்துதே, மேற்கூறப்பட்ட புதிய நடத்தை விதித் தொகுப்பை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் துரிதப்படுத்தியிருந்தது.

போராளிகளைச் சேர்ப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் ஆனது வெற்றிகரமாக சமூக வலைத்தளத்தை கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக பயன்படுத்தியிருந்ததோடு, ஐரோப்பிய பொருளாதார மந்த நிலை, தீவிர வலதுசாரிக் கட்சிகளை ஊக்குவித்திருந்ததோடு, அதன் காரணமாக இணையத்தில் யூதஎதிர்ப்புவாதமும், வெளிநாட்டவர்களுக்கெதிரான எதிர்ப்பும் அதிகரித்திருந்தது.

வெறுப்புப் பேச்சுக்கு பொறுப்பேற்க தொழில்நுட்ப நிறுவனங்கள் விரும்புவதில்லை என்ற நிலையில், தற்போது, வெறுப்புப் பேச்சுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுத்துள்ளன. இது அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. ஏனெனில், முன்னர், சுதந்திரமான வெளிப்பாட்டையும் மற்றும் விடயங்களை அல்லது கணக்குகளை அழிக்க சமூக வலைத்தளங்கள் மறுத்திருந்தன.

எவ்வாறெனினும் மேற்கூறப்பட்ட நிலையானது மெதுவானதும் அதே நேரம் உறுதியானதாகவும் மாறி வருகின்றது. 2015ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து, ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய 125,000 கணக்குகளை டுவிட்டர் இடைநிறுத்தியிருந்ததுடன், வெறுப்பு பேச்சுக்கு எதிராக, ஜெர்மனிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பேஸ்புக் இணங்கியிருந்தது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், பேஸ்புக் மற்றும் ஜெர்மனிய அரசாங்கத்துடன் கூகுளும் டுவிட்டரும் இணைந்திருந்தன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .