2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

விண்வெளியில் கேட்ட அபூர்வ இசை (VIDEO)

George   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனம்புரியாத, மனதை மயக்கும் புதுவித இசையை சில விண்வெளி வீரர்கள் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது கேட்க நேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பூமியில் இருந்து சுமார் இரண்டு இலட்சம் மைல்கள் தொலைவில் அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் விண்வெளியில் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங் மற்றும் யூகேன் கெர்னன் ஆகியோர் அந்த அபூர்வ இசையை கேட்டு, அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா ஆய்வு நிலையம் பதிவுசெய்து வைத்துள்ளது.

இரு தொலைத்தொடர்பு இயந்திரங்களுக்கு இடையில் ஏற்படும் ஒலிகாந்த ஈர்ப்புகூட இதைப்போன்ற இசைவடிவில் கேட்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், சனி கிரகத்தில் உள்ளதைப்போல் சந்திரனில் புவிஈர்ப்பு மற்றும் மின்காந்த அலைகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், இதுவரை இந்த அபூர்வ இசை தொடர்பான செய்தி வெளியாகாதது ஏன்? என்பது குறித்து நாசா தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை. 

எனினும், விண்வெளி ஆராய்ச்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படாத வகையில் தங்களது விண்வெளிப் பயணத்தின்போது ஆய்வாளர்கள் சந்திக்கும் விபரீதமான, விசித்திரமான அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .