2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

லிங்ட்இன்னை வாங்கும் மைக்ரோசொப்ட்

Shanmugan Murugavel   / 2016 ஜூன் 15 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில்முறை வலையமைப்பு இணையத்தளமான லிங்ட்இன்னை, வெறும் 26 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு சற்று அதிகமான தொகைக்கு பணமாக மென்பொருள் ஜாம்பவானான மைக்ரோசொப்ட் வாங்குகின்றது.

அதன்படி, பங்கொன்றுக்காக, 196 ஐக்கிய அமெரிக்க டொலர்களையே மைக்ரோசொப்ட் செலுத்தவுள்ளது. மைக்ரோ செலுத்தவுள்ள பங்கொன்றுக்கான குறித்த தொகையானது, கடந்த வெள்ளிக்கிழமை (10) பங்குச்சந்தையின்படி, பங்கொன்றின் 50 சதவீதமே ஆகும்.

லிங்ட்இன்னை வாங்குவதன் மூலமாக, தனது, வணிக, மின்னஞ்சல் மென்பொருள் விற்பனையை அதிகரிக்க, இது உதவும் என மைக்ரோசொப்ட் எதிர்பார்க்கின்றது.

இதேவேளை, லிங்ட்இன்னானது, அதன் முற்றாக மாறுபாட்ட வர்த்தகப் பெயர், கலாசாரம், சுதந்திரத்தை தொடர்ந்தும் கொண்டிக்கும் என மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், லிங்ட்இன்னை வாங்குவதன் மூலம், 430 மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களை உலகளாவிய ரீதியில் கொண்டு, உலகின் மிகப்பெரிய தொழில்முறை சமூக வலைத்தளமான லிங்ட்இன்னை கையாளும் வாய்ப்பு மைக்ரோசொப்ட்டுக்கு கிடைப்பது, அந்நிறுவனத்துக்கு பாரிய அனுகூலமாகவே கருதப்படுகிறது.  

மறுகணத்தில், லிங்ட்இன்னின் பங்குகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும், தற்போதைய கடினமான காலத்திலும், மைக்ரோசொப்ட்டுடன் மிகப் பெரிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டமை, லிங்ட்இன்னுக்கான வெற்றியாகவே கருதப்படுகிறது. ஒப்பந்தத்தின்படி, இயங்கு நிலையிலுள்ள ஒவ்வொரு லிங்ட்இன் பயனர்களுக்கும், 250 ஐக்கிய அமெரிக்க டொலர்களை மைக்ரோசொப்ட் செலுத்துகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .