Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 04 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது சேவையிலுள்ள சுவாரஷ்யமானதும் தொடர்புபட்டதுமான கணக்குகளை பயனர்கள் இலகுவாக தொடர்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்ட புதிய “Connect” tabஐ கடந்த செவ்வாய்க்கிழமை (03) டுவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்படி புதிய வசதியானது அப்பிளின் iOS, அன்ட்ரொயிட் என இரண்டு அலைபேசி இயங்குதளங்களிலும் கிடைக்கக்கூடியதாகவுள்ளதுடன், மேற்படி புதிய tabஇன் மூலம் உங்களது அலைபேசியில் இருக்கும் Contact listஇல் இருந்து டுவிட்டரின் algorithm மூலமான “Recommendations” ஊடாக நண்பர்களையும் குடும்பத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
முன்னர் இருந்தத்தைப் போல, டுவிட்டரின் பரிந்துரைகள், நீங்கள் யாரைத் தொடருகின்றீர்கள், யாரினுடைய டுவிட்டை like செய்கின்றீர்கள், உங்களுடைய உள்ளூரிலுள்ள பிரபலமான கணக்குகள், தற்போது உலகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பன உள்ளடங்கலாக வேறுபட்ட காரணிகள் அடிப்படையில் இருந்த நிலையில், புதிய “Connect” tabஇன் மூலம் ஏன் பரிந்துரைகளை மேற்கொள்ளுகின்றோம் எனவும் டுவிட்டர் தெரிவிக்கவுள்ளது.
தனது பயனர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு டுவிட்டர் தள்ளாடுகின்ற நிலையிலேயே மேற்படி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டுவிட்டர் பயனர்கள், சுவாரஷ்யமான கணக்குகளை கண்டுபிடித்து தொடருவார்கள் எனவும், இதன் மூலம் டுவிட்டரை பயன்படுத்துபவர்களையும் டுவிட்டருடன் ஈடுப்பாட்டுடன் இருக்கும் நேரத்தை அதிகரிக்கலாம் எனவும் டுவிட்டர் கருதுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
3 hours ago
3 hours ago