Shanmugan Murugavel / 2016 நவம்பர் 30 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையத்தின் மூலமாக விற்பனைகளை மேற்கொள்ளும் தளமான அமெஸொன், கொள்முதலாளர்களால் தளத்தில் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகளுக்கான எல்லையொன்றை நிர்ணயித்துள்ளது.
தவறான மதிப்பீடுகளை நிறுத்தும் நோக்கிலேயே மேற்படி நடவடிக்கை அமெஸொனினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெஸொனின் இணையத் தளத்திலிருந்து வாங்காத பொருட்களுக்கு, வாரமொன்றுக்கு ஐந்து மதிப்பீடுகளை மட்டுமே தற்போது மேற்கொள்ள முடியும்.
எவ்வாறெனினும், அமெஸொன் தளத்தின் மூலம் வாங்கப்பட்ட அனைத்து பொருட்களுக்குமான மதிப்பீடுகளை எந்தவித கட்டுப்பாடுமின்றி மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வாடிக்கையாளர் பகுதியிலேயே, விதிகளை அமெஸொன் இற்றைப்படுத்தியுள்ளது. கடந்த வாரயிறுதி முதல் மேற்படி மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
புதிய விதிகள், புத்தங்களுக்குச் செல்லுபடியாகாது எனக் கூறப்பட்டுள்ளது.
மேற்குறித்த நடவடிக்கையானது பெரும்பாலான பொருட்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. நேர்மறையான மதிப்பீடுகளை விற்பனை செய்பவர்களைத் தடுப்பதற்கான அமெஸொனின் நடவடிக்கையின் ஓரங்கமாகவே மதிப்பீடுகளுக்கான எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பயனர்களிடம் மதிப்பீடுகள் தொடர்பான தமது நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொருட்டே, குறித்த நடவடிக்கையை அமெஸொன் மேற்கொண்டுள்ளது.
இந்த வருட ஆரம்பத்தில், போலியான மதிப்பீடுகளை வாங்கும் விற்பனையாளர்களிடம் வழக்குத் தொடர ஆரம்பித்த அமெஸொன், இலவச பொருட்களுக்குப் பதிலாக வாடிக்கையாளர் நிலைகளை பெரும் நிறுவனங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025