Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஒக்டோபர் 28 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்னும் வெளிப்படுத்தப்படாத காரணத்துக்காக, யாகூவின் பயனர்கள் அனைவரினதும் உள்வரும் மின்னஞ்சல்களைத் தேடுமாறு வழங்கப்பட்ட நீதிமன்ற இரகசிய உத்தரவு தொடர்பில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாக அதிகாரிகளால், ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் முக்கியமான உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும், வழமைக்கு மாறான குறித்த விடயத்தை, பரந்தளவில் பகிரங்கப்படுத்துவதற்கு, ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாக அதிகாரிகள், இன்னும் தயாரில்லை என்றே கூறப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் பெற்றவர்களின் கருத்துப்படி, புலனாய்வு நடவடிக்கைகள் மற்றும் நீதியை மேற்பார்வையிடுகின்ற, செனட் மற்றும் பிரதிநிகள் சபையின் செயற்குழு உறுப்பினர்களுடன், நிறைவேற்றுச் சபை அதிகாரிகள் உரையாடியதாக கூறியுள்ளனர்.
எவ்வாறெனினும், யாகூவுக்கு வழங்கப்பட்ட உத்தரவினை அறிந்து கொள்ளும் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள், அண்மைய காலங்களில் வெற்றியடையாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், குறித்த தகவல்கள், உணர்ச்சிபூர்வமான தேசிய பாதுகாப்பு விடயம் என, ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைய எதிர்காலத்தில், குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்படாது என, குறித்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில வெளிநாட்டு புலனாய்வு நடவடிக்கைகளுக்கு அதிகாரமளிப்பதற்கான ஐக்கிய அமெரிக்க தேசியக் காங்கிரஸின் காலக்கெடுவுக்கு முன்னதாக, தரவு சேகரிப்பது தொடர்பில் மேலும் வெளிப்படையாக இருக்குமாறு ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துக்கு அழுத்தம் அதிகரிக்கின்ற நிலையிலேயே, யாகூவுக்கு வழங்கப்பட்ட உத்தரவை இரகசியமாக வைத்திருப்பாடு என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago