2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மின்சாரக் காரை அப்பிள் தயாரிக்கிறது

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 13 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிளானது, போட்டிக்கு மின்சாரக் காரை தயாரிப்பது திறந்த இரகசியம் என டெஸ்லாவின் உரிமையாளர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். தவிர, சாரதி இல்லாத கார்கள், விரைவிலேயே காலங்கடந்ததாக மாறிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் அதிகம் விற்பனையாகும் மின்சாரக் கார்ச் சின்னம் என்ற அடையாளத்துக்காக டெஸ்லா, நிஷான் மற்றும் பி.எம்.டபில்யுவுடன் போட்டியிடுகின்ற நிலையில், தற்போது நட்டத்தில் இயங்கி வருகிறது. தவிர, கடந்த மாதங்களில், அதன் பொறியிலாளர்கள், அப்பிள், Faraday Future உள்ளிட்ட போட்டி நிறுவனங்களால் பணியிலமர்த்தப்பட்டிருந்தனர்.

தான், மின்சாரக் காரொன்றின் தயாரிப்பில் ஈடுபடுவதாக அப்பிள் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதிருந்தாலும், கார் தொடர்பான domainகளான apple.car, apple.cars, apple.auto உள்ளடங்களான domainகளை அண்மையில் பதிவு செய்திருந்தது.

இந்நிலையிலேயே, சொந்தமாக மின்சாரக் காரொன்றை அப்பிள் தயாரிக்க முற்படுகிறது என்பது வெளிப்படையானது என்றும், நீங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொறியியலாளர்களை, மின்சாரக் காரை தயாரிக்க பணிக்கமர்த்தும் போது, நீங்கள் எதையும் ஒழிப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார். எனினும், அப்பிளை போட்டியாக கருதவில்லையென்றும் இதன் மூலம் இந்தத் தொழிற்துறையை விரிவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அதிகம் விற்பனையாகும் மின்சாரக் கார்களில் ஒன்றாக, டெஸ்லாவின் எஸ் வகை, பந்தயக் கார் விளங்கியிருந்தது. இந்தக் காரின் மின்கலத்தின் கொள்ளளவு மற்றும் செயல்திறனைப் பொறுத்து, அதன் விலை 56,000 ஸ்டேர்லிங் பவுண்களிலிருந்து 85,000 ஸ்டேர்லிங் பவுண்களாக இருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .