2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

பெலிஹூல் ஓயா மற்றும் உலக முடிவுக்கு இடையில் கேபிள் கார் சேவை

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் பெலிஹூல் ஓயா  மற்றும் உலக முடிவு காணப்படும் மலைத் தொடர் பகுதிகளுக்கு இடையில், கேபிள் கார் சேவையொன்றை அமைக்க நடவடிக்கைஎடுத்துள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர்  நிலுக்கா ஏக்கநாயக்க தெரிவித்தார்.

ஜப்பானின் நிதியுதவியின் கீழ் இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதோடு, தெரிவித்த அவர், பெலிகுல் ஓயா மற்றும் உலக முடிவு பகுதிகள் சுற்றுலா பயணிகளை அதிக கவர்ந்த இடமாகுமென்பதால், இப்பகுதியில் கேபிள் கார் சேவை அமைக்க டுபாய் அரசுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த இந்த திட்டத்துக்கான ஆலோசனைகளை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புத்திஜீவிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்தப் பகுதியில் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X