2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

பறக்கும் பஸ்

Ilango Bharathy   / 2021 ஜூலை 14 , பி.ப. 01:37 - 0     - 109

மெக்சிகோவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேபிள் பஸ்ஸானது ( cable bus) அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் மெக்சிகோ நகரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், துரிதமாகப் பயணம் மேற்கொள்ளவும் இந்த கேபிள் பஸ் சேவையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குவாடெபெக் (Cuautepec) எனும் பகுதியில் சுமார் 9.2 கிலோ மீற்றர் தூரத்திற்குச் செல்லும் இந்த கேபிள் பஸ்ஸின்  ஒரு கேபிளில் 10 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாப் பரவலால் 6 பேர் மாத்திரமே  அமர அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X