Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 01 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக இயங்கும் ‘பறக்கும் படகு’ முதல் முறையாக டுபாயில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டுபாயில், சுவிட்சர்லாந்து நாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அமீரக நிறுவனத்தின்
கூட்டு முயற்சியில், தி ஜெட் என்ற பெயருடைய பறக்கும் படகு அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
சொகுசு படகாக உருவாக்கப்பட்டுள்ள இதில் 8 முதல் 12 பேர் வரை பயணம் செய்ய
முடியும் எனவும், மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுடையது எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் இரண்டு எரிபொருள் செல்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு
ஹைட்ரஜன் எரிசக்தியால் இயங்கும் இந்த படகின் வெள்ளோட்டம் விரைவில் துபாய்
கடல் பகுதியில் காண முடியும் என அந்த தனியார் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இப் படகு இயங்கும்போது சத்தம் வருவது இல்லை எனவும், தண்ணீருக்கு 80
செ.மீ உயரத்திற்கு மேல் பறந்து செல்லும் எனவும், ஹைட்ரஜன் எரிபொருளில்
இயங்குவதால் இதில் இருந்து புகை போன்ற உமிழ்வுகள் வெளியேறுவதில்லை எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago