Shanmugan Murugavel / 2016 ஜூலை 20 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றவியல் விசாரணைக்காக கோரப்பட்ட தகவல்களை வட்ஸ்அப் வழங்கத் தவறியதாக நீதிபதியொருவர் தெரிவித்தமையையடுத்து, பிரேஸிலில் வட்ஸ்அப் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது.
கடந்த இரண்டு வருடங்களில் மூன்றாவது தடவையாக இம்முறை வட்ஸ்அப் எதிர்நோக்கிய தடையானது சில மணித்தியாலங்கள் நீடித்த நிலையில், இதனால் மில்லியன் கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறெனினும், பொருத்தமற்றது எனத் தெரிவித்து, குறித்த தடையை உச்ச நீதிமன்ற நீதிபதி றிக்கார்டோ லெவன்டோவ்ஸ்கி நீக்கியிருந்தார். கோரப்பட்ட தகவல்களை தாம் கையாள முடியாது என வட்ஸ்அப் தெரிவித்திருந்தது.
இறுதியாக, இதற்கு முன்னர், கடந்த மே மாதத்தில் இடைக்காலத்தடை வந்த நிலையில், 100 மில்லியன் கணக்கானோர், வேறு சேவைகளை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
இது தவிர, வட்ஸ்அப்பை முடக்குமாறு கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றாததைத் தொடர்ந்து பேஸ்புக்கின் நிறைவேற்றதிகாரி ஒருவர், ஒரு இரவு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்த வட்ஸ்அப்பின் பேச்சாளர் ஒருவர், தாங்கள் முன்னர் கூறியது போன்று, தங்களால் கையாள முடியாத தகவல்களை, தங்களால் பகிர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறெனினும், இவ்வாறு தொடர்ந்து வட்ஸ்அப், இடையிடையே தடைப்படுவதால், வட்ஸ்அப்பின் பிரபலத்தன்மை பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.
37 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
4 hours ago
5 hours ago
8 hours ago