2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

பிரான்ஸில் பேஸ்புக்குக்கு பாதிப்பு

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகவலைத்தள ஜாம்பவானான பேஸ்புக்கின் அங்கத்தவர்கள் அல்லாதோரை, அவர்களின் அனுமதியில்லாமல், பிரான்ஸில் கண்காணிப்பதை, மூன்று மாதங்களுக்குள் நிறுத்துமாறு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, உறுதியான கடவுச்சொல்லுக்கான தேவையையும் வலியுறுத்தியுள்ள பிரான்ஸின் தரவுப் பாதுகாப்பு உடல், கடவுச்சொல்லில் குறைந்தது எட்டு எழுத்துக்களை கொண்டிருக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. தற்போதைய பேஸ்புக் கடவுச்சொல்லில் ஆறு எழுத்துக்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எல்லாத் தேவைகளுக்காகவும் பேஸ்புக்கை பயன்படுத்தும் மக்களின் தனியுரிமையே பாதுகாப்பதே முக்கியம் எனத் தெரிவித்துள்ள பேஸ்புக்கின் பேச்சாளர் பெண்மணி ஒருவர், பிரான்ஸின் தரவுப் பாதுகாப்பு உடலின் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கின் அங்கத்தவர்கள் இல்லாதவிடத்திலும் cookiesஐ நிறுவுவதன் மூலம், தனது இணையத்தளத்துக்கு விஜயம் செய்பவர்களை, அவர்களின் இணைய நடவடிக்கைகளை சிறிய text கோப்புக்களின் மூலம் பெறுவதையிட்டு, அவர்களை கண்காணிப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம், பெல்ஜியத்திலும் பெல்ஜியத்தின் தனியுரிமை ஆணையாளரால் விதிக்கப்பட்ட மேற்குறிப்பிட்டவாறான ஒழுங்கு முறையின் அடிப்படையில், பேஸ்புக்கானது பெல்ஜியத்தில் பார்வையிடப்படும் முறைமையை பேஸ்புக் மாற்றியிருந்தது. பேஸ்புக்கின் இவ்வகையான முறைமை, datr எனப்படுவதுடன், இது இரண்டு வருடங்களுக்கு நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரான்ஸின் தரவுப் பாதுகாப்பு உடலின் ஒழுங்குமுறைகளை மூன்று மாதங்களுக்குள் பேஸ்புக் கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில், அபராதத்தை பேஸ்புக் எதிர்நோக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .