2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

புதிய மென்பொருளினால் நிறுத்தப்படும் Ransomware

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது தடங்களில் வளர்ந்துவரும் பிரச்சினையான Ransomwareஐ நிறுத்துவதற்கான மென்பொருளினை வடிவமைத்துள்ளதாக புளோரிடா பல்கலைக்கழகத்திலுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூகோளம் முழுவதும் தற்போது பாரிய பிரச்சினையாக மாறியுள்ள Ransomware என்பது யாதெனில், Ransomware ஆனது கணினி கோப்புக்களை encrypt செய்வதாகும். இதைப் பயன்படுத்தும் ஹக்கர்கள், குறித்த கணினி கோப்புக்களை விடுவிப்பதுக்கு மாற்றீடாக பணத்தினை கோருவர்.

இந்நிலையில், CryptoDrop எனப்படும் இதற்கான தீர்வானது, குறிப்பிட கோப்புகளை encrypt செய்தவுடன் malwareஐ கண்டுபிடித்து நிறுத்தும் என அதை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மென்பொருளுக்காக, புளோரிடா பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் விஞ்ஞான திணைக்களத்தின் துணைப் பேராசியரான பற்றிக் ட்ரெய்னர், முனைவர் மாணவரான நோலன் ஸ்கெய்வ், வில்லநோவா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஹென்றி கார்ட்டருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், கருத்து தெரிவித்த ஸ்கெய்வ், தமது அமைப்பானது ஏறத்தாழ ஆரம்ப கட்ட எச்சரிக்கை அமைப்பு போன்றது எனத் தெரிவித்துள்ளார். அது Ransomwareஐ ஆரம்பத்திலேயே தடுக்காது என்றும், ஆனால், Ransomware தனது நோக்கத்தை முழுமைப்படுத்துவதை தடுக்கும் எனக் கூறியுள்ளார். உங்கள் வன்தகட்டில் உள்ள அனைத்ததையும் இழப்பதற்கு பதிலாக, நீங்கள், சில படங்களையோ அல்லது சில கோப்புக்களையோதான் இழக்க நேரிடும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

சோதனைகளின் போது, malware மாதிரிகளை 100 சதவீதம் அடையாளங் கண்ட CryptoDrop, சராசரியாக அவை 10 கோப்புக்களை encrypt செய்தவுடன் அவற்றை நிறுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மடங்காக Ransomware தாக்குதல்கள் கடந்த வருடம் அதிகரித்ததாகவும், இந்த வருடம், இன்னும் வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் எஃப்.பி.ஐ கடந்த மே மாதம் எச்சரித்திருந்தது. தமக்கு கடந்த வருடத்தில், 2,400க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாகவும், இவ்வாறான தாக்குதல்களிலிருந்து 24 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் இழக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்ப்பதாக  எஃப்.பி.ஐ தெரிவித்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .