Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜனவரி 30 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்பிளின் இயங்குதளமான iOSஐ கொண்டுள்ள பயனர்களை இலக்கு வைத்து மைக்ரோசொப்ட் ஆனது, கடந்த செவ்வாய்க்கிழமை (26) புதியதொரு செயலியை வெளியிட்டுள்ளது.
News Pro என அழைக்கப்படும் இச்செயலியானது, மைக்ரோசொப்ட் Garageஇன் புதிய சேவை என்பதுடன் Bing Newsஇன் மூலமே இச்சேவை வழங்கப்படுகிறது. தற்போது இணையத்தளத்திலும் ஐபோனிலும் இச்சேவையை பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. மேற்படி News Pro செயலியானது, உங்களது பணிகள் தொடர்பான செய்திகளை உங்களுக்கு வழங்குகிறது.
மேற்படி News Pro செயலியானது, அப்பிளினுடைய iOS 9 இயங்குதளத்தில் உள்ள அப்பிளினுடைய நியூஸ் செயலியையே பிரதிபலிக்கின்றபோதிலும் News Proவின் வேறுபாடு என்னவெனில், இதில், உங்களது சமூகவலைத்தள கணக்குகளான, பேஸ்புக்கிலோ அல்லது LinkedInஇல் உள்நுழைவதன் மூலம், உங்களது விருப்பங்களை புரிந்து கொண்டு, அவ்விருப்பங்கள் தொடர்பான செய்திகளை News Pro வழங்குகின்றது.
உதாரணமாக, நாம் News Proவில் செல்லும்போது தமிழ்மிரர் எனும் சொல் எமது விருப்பங்களுக்குள் காணப்படுவதுடன், அது தொடர்பான செய்திகளை News Pro வெளிப்படுத்தும். தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் News Proவின் இணையத்தள பதிப்பில் சில குறைபாடுகள் காணப்படுகின்ற போதும், இதன் அலைபேசி பதிப்பில் நன்றாக இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி News Proவானது, மைக்ரோசொப்ட் Garageஇன் தயாரிப்பாக காணப்படுகின்ற நிலையில், அண்மைய எதிர்காலத்தில் வின்டோஸ் இயங்குதளத்துக்கோ அல்லது அன்ட்ரொயிட் இயங்குதளத்துக்கோ வராது என கருதப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago