Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 17 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தினை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் தொலைநோக்குடன் இயங்கிவரும் Yarl IT Hub (YIT)-இனால் ஒழுங்கமைக்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றே Yarl Geek Challenge (YGC) ஆகும். YGC ஆனது கடந்த நான்கு வருடங்களாக நடாத்தப்பட்டு, இம்முறை ஐந்தாவது வருடமாக நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொழில் முயற்சியாண்மையாளர்களுக்கும் தொழில்நுட்ப தொழில் தொடங்குநர்களுக்கும் தேவையான தொழில்நுட்ப, மூலதன, வணிக ரீதியான வளங்களையும் உதவிகளை பெற உதவுவதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும்.
YGC 5-க்கான சிரேஷ்ட பிரிவுப் போட்டிகளின் தகுதிகாண் போட்டிகள், இம்மாதம் நான்காம், ஐந்தாம், ஆறாம் திகதி ஆகிய மூன்று நாட்களில், ஹற்றன் நஷனல் வங்கியின் யாழ் நகர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதிலிருந்து இறுதிப்போட்டிகளுக்கு தெரிவு செய்யபட்ட ஒன்பது அணிகளும், கொழும்பில் உள்ள டயலொக் தலைமையத்தில், நாளை மறுதினம் சனிக்கிழமை (19), நண்பகல் ஒரு மணிக்கு இடம்பெறவுள்ள பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் போட்டியிடுகின்றன .
இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள அணிகள், இறுதிப் போட்டியின்போது, தங்கள் படைப்புகளை மெருகேற்றி அளிக்கை செய்யவுள்ளனர். இவ்வொன்பது படைப்புகளில் சில, தொழில் முயற்சியாக, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெறும் அணிகள், தங்கள் தொழில் முயற்சிக்குத் தேவையான மூலதனம், வழிகாட்டல் என்பனவற்றை பெறவுள்ளன. வடமாகாணத்தை தொழில்நுட்ப பூங்காவாக மாற்றத் துடிக்கும் YIT சமூகத்தின் இன்னுமொரு மைற்கல், நாளை மறுதினம் பூர்த்தியாகும் என்பதில் ஐயமில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago