Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
J.A. George / 2023 ஜூலை 06 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘மெட்டா’ நிறுவனம் டுவிட்டருக்குப் போட்டியாக ‘திரெட்ஸ்’ என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலி மூலம் பயனர்கள் நிகழ்நேர இடுகைகளைப் பதிவிடவும் பகிரவும் பிறருக்கு அனுப்பவும் முடியும்.
டுவிட்டரில் ஒரு குறிப்பிட்ட இடுகையைத் தொடர்ந்த பல கருத்துப் பதிவுகள், ‘திரெட்ஸ்’ எனக் குறிப்பிடப்படும் நிலையில், அதையே மெட்டா நிறுவனம் தன் செயலியின் பெயராக வைத்திருக்கிறது.
இந்தத் ‘திரெட்ஸ்’ கணக்கைப் பயனர்கள் தங்களின் புகைப்படங்களைப் பகிரும் தளமான ‘இன்ஸ்டகிராம்’ கணக்குடன் இணைத்துக்கொள்ளவும் இயலும்.
கடந்த ஆண்டு எலான் மஸ்க் ‘டுவிட்டர்’ சமூக ஊடகத்தை வாங்கியதிலிருந்து, தொடர்ந்து ஏற்படும் மாற்றங்கள் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன.
இந்த நிலையில், விட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிதாக திரெட்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
டுவிட்டருக்குப் போட்டியாக களத்தில் இறங்கிய மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் திரெட்ஸ் டுவிட்டரில் டிரெண்டிங்கி உள்ளது.
திரெட்ஸ் சமூக வலைதளத்தில் தமிழ்மிரர் www.threads.net/@Tamilmirror
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
5 hours ago