Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜக் டோர்சியைத் தனது நிரந்தர பிரதம நிறைவேற்றதிகாரியாக அறிவித்துள்ள டுவிட்டர், அதன் தலைவர் பதவிக்கு வேறெங்கும் இருந்து ஆளைத் தேடுவதாகத் தெரிவித்துள்ளது.
அலைபேசி கட்டண நிறுவனமான Square இன் தலைவராகவும், இரு பொறுப்புக்களை டுவிட்டரின் இணை நிறுவுநரான ஜக் டோர்சி வகிப்பதன் காரணமாகவே வேறெங்கும் இருந்து தலைவரை டுவிட்டர் தேடுகிறது.
கேள்வியை இலகுவாக்கும் பொருட்டும், புதிய தலைமைத்துவத்துக்கு புத்தாக்கமான குரலை வழங்கும் பொருட்டு, தலைவர் பதவியையும், பிரதம நிறைவேற்றதிகாரி பொறுப்பையும் பிரிக்க பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளதாக டுவிட்டரின் முன்னணி சுயாதீன இயக்குனர் பீற்றர் கியூரி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரின் முன்னைய பிரதம நிறைவேற்றதிகாரி டிக் கொஸ்ட்டோலோ ஜூலை முதலாம் திகதி பதவி விலகியதையடுத்து, இடைக்கால பிரதம நிறைவேற்றதிகாரியாக ஜக் டோர்சி பதவியேற்றிருந்தார்.
இதேவேளை டுவிட்டரையும், Square ஐயும் டோர்சி நடத்திச் செல்வாரா என்று சில முதலீட்டாளர்கள் கவலையை வெளியிட்ட போதிலும், டோர்சி முதற்தடவையாக 2008ஆம் ஆண்டு டுவிட்டரின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்து வெளியேற்றப்பட்டதை விட, இப்போது 38 வயதான டோர்சி திறமையான தலைவராக இருப்பதாக மற்றையவர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை (05), டுவிட்டரின் இந்த அறிவிப்பு வெளியானவுடன், அதன் பங்குகள் ஆறு சதவீதம் அதிகரித்திருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago