Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 மே 25 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுவிட் ஒன்றிற்கான, இலகுவான 140 characters என்ற எண்ணிக்கையிலிருந்து கடந்த பத்து ஆண்டுகளில் மாற்றலாகிக் கொண்டு வந்த டுவிட்டர், டுவிட்டொன்றில் புகைப்படங்களையும் காணொளிகளையும் hashtagகளையும் Vinesகளையும் உள்ளடக்கி புத்தாக்க வெளிப்பாடான டுவிட்டை வெளிப்படுத்த அனுமதித்திருந்த டுவிட்டர், கடந்த மாதாங்களில் உங்களது சமூகத்தில் கருத்துக்கணிப்பை நடாத்தவும் GIFகள் மூலம் விரைவாகவும் புத்திசாலித்தனமாகவும் எதிர்வினையாற்றவும் Periscope ஒளிபரப்புக்களை டுவிட்களில் பகிர்ந்து மகிழவும் டுவிட்டர் அனுமதித்திருந்தது.
மேற்கூறப்பட்டவாறு டுவிட் ஒன்றில் பல விடயங்களை செய்யக்கூடியதாகவிருந்தாலும் மேலும் புதிய பயனர்களைக் கவரும் பொருட்டு தனது விதிகள் சிலவற்றை தளர்த்தவுள்ள டுவிட்டர், டுவிட் ஒன்றில் மேலும் விடயங்களை செய்ய அனுமதிக்கவுள்ளது.
அதாவது, எதிர்வரும் மாதங்கள் முதல், டுவிட்களை இலகுவாக்கும் பொருட்டு மாற்றங்களைச் செய்யவுள்ளதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.
அதாவது, இனிமேல் டுவிட் ஒன்றிற்கு பதிலளிக்கும் போது இனிமேல் டுவிட்டர் பெயரானது 140 characters என்ற எண்ணிக்கையில் வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் நீங்கள் மேற்கொள்ளும் உரையாடல்கள் அனைவரிடம் போய்ச் சேரவேண்டும் என்பதற்காக நீங்கள் உங்கள் உரையாடலை சுருக்க வேண்டிய தேவையில்லை.
இது தவிர, இனிமேல் நீங்கள் டுவிட்களில் புகைப்படங்கள், GIFகள், காணொளிகள், கருத்துக்கணிப்புகள், Quote டுவிட்களை இணைக்கும்போது அவையும் 140 characters எண்ணிக்கையில் வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீங்கள் மேலதிகமாக எழுத்துக்களை உங்கள் டுவிட்டரில் சேர்க்க முடியும்.
தவிர, உங்களுடைய டுவிட்களை நீங்களே இனி Retweet செய்ய முடியுமென்றும் உங்களுக்கு Quote Tweet செய்ய முடியுமென்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, தற்போது இரண்டு டுவிட்டர் பயனர்கள் டுவிட்டரில் உரையாடலில் ஈடுபடும்போது அவ்வுரையாடலானது அவ்விரண்டு பயனர்களுக்கும் பொதுவான பயனர்களுக்கு மட்டுமே தற்போது செல்லும். அந்த உரையாடலை அனைத்துப் பயனர்களுக்கும் சென்றடையைச் செய்வதற்காக டுவிட்டர் பெயரின் முன்னால் முற்றுப்புள்ளி இடவேண்டும் என்று இருந்த நிலையில், இனிமேல் அதை Retweet செய்தால் அனைத்துப் பயனர்களிடத்தேயும் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் நீங்கள் டுவிட் ஒன்றில் கட்டுரையொன்றையோ அல்லது வேறு உள்ளடக்கத்தையோ பகிரும்போது வழங்கும் Linksகளுக்கு இனிமேலும் characters கணக்கிடப்படவுள்ளது. தற்போது Link ஒன்றிற்காக 23 characters குறைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago