Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 நவம்பர் 16 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உறுதியான encryptionஐ முன்னெடுத்தல், குடியேற்ற சீர்திருத்தம், தமதுஇயக்குதளங்களில் பயனர்கள் பகிருகின்ற உள்ளடக்கங்களின் உரிமைகளைக் கொண்டிருப்பதை பேணுதல் உள்ளிட்ட கொள்கை முன்னுரிமைகளின் விரிவான பட்டியலொன்றை, பேஸ்புக், அமெஸொன் உள்ளிட்ட ஐக்கிய அமெரிக்க இணைய நிறுவனங்கள், ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்புக்கு அனுப்பியுள்ளன.
ட்ரம்ப், தனது பிரசார காலத்தில், ஏறத்தாழ எல்லா நேரங்களிலும் விரும்பியிருக்காததோடு, சில சமயங்களில், சிலிக்கன் பள்ளத்தாக்கை வெளிப்படையாக பழித்துரைத்துமிருந்தார்.
இந்நிலையிலேயே, அல்பபெட்டின் கூகுள், ஊபர், டுவிட்டர் உள்ளிட்ட 40 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கின்ற வணிகக் குழுவொன்றான இணையச் சங்கத்தினால் கடந்த வெள்ளிக்கிழமை (11), அனுப்பப்பட்ட கடிதமானது, ட்ரம்புக்கும் தொழில்நுட்பத் துறைக்குமிடையிலான உறவைச் சீர் செய்யும் ஆரம்ப முயற்சிகாவே அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பொருளாதாரத்தை பகிர்ந்து கொள்ளுதல், புலமைச் சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானங்கள் மீதான வரியைக் குறைத்தல், ஐரோப்பிய சந்தையில், ஐக்கிய அமெரிக்க இணைய நிறுவனங்கள் வளர்ச்சியடையத் தடையாகவுள்ள பல தடைகளுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துதல் போன்ற சில கொள்கை இலக்குகள் ட்ரம்பின் முன்னுரிமைகளுடன் ஒத்துப்போவதுடன், உறுதியான encryption போன்றவை ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago