2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

ஞாயிறன்று சிவப்பு சந்திரக்கிரகணம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌர்ணமி தினமான எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) பூரண சந்திரகிரகணமும் சிவந்த நிறத்திலான சந்திரனும் இணையும் அபூர்வமான நிகழ்வு  இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு, ஏறத்தாழ 72 நிமிடங்கள் நீடிக்குமென எதிர்வு கூறப்படுகின்றது.  30 வருட இடைவெளிக்குப் பின்னர் இவ்வாறான சிவப்புச் சந்திர கிரணம் இடம்பெறுகின்றது.

இந்த சந்திரகிர கணத்தை பூமியன் மேற்கத்தேய அரைக் கோளத்திலுளள்ள   1 பில்லியன் ஐரோப்பா, ஆபிரிக்காவிலுள்ள சுமார் 1.5 பில்லியன்  மக்களும் மற்றும் மேற்கு ஆசியாவிலுள்ள 500 மில்லியன் மக்களும் காணக்கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விஷேட நிகழ்வு காரணமாக, சந்திரனானது 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் ஒளிர்மையானதாகவும் காணப்படுமெனவும், அதனைத் தொடர்ந்து சாதாரண சந்திரகிரகணம் ஏற்படுமெனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .