2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

ஜிமெயில் எச்சரிக்கை

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 10 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பான இணைய தினத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (09) நினைவுகூர்ந்த கூகிளானது, பாதகம் விளைவிக்கக்கூடியதும் முற்றிலுமாக பாதுகாப்பில்லாதுமான மின்னஞ்சல்களை அடையாளம் காணும் பொருட்டு, தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில். புதிய அங்கிகரிக்கும் வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜிமெயிலில் பாதுகாப்பு அளவீடுகளை அதிகரிக்கவுள்ளதாகவும் encrypt செய்யப்படாத இணைப்புகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களை அடையாளங்காணவுள்ளதாகவும் கடந்த வரும் கூகிள் தெரிவித்திருந்த நிலையிலேயே, மேற்கூறப்பட்டவற்றை தற்போது கூகிள் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பற்ற இணைப்புகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களை கூகிள் எச்சரிப்பதுடன் அவற்றை அனுப்புவர்களையும் கூகிள் எச்சரித்துள்ளது.

அந்தவகையில்¸ encrypt செய்யப்படாத கணக்கை உடைய ஒருவருக்கு மின்னஞ்சலை இணையத்தில் ஜிமெயிலில் அனுப்பும்போது சிறிதாகத் திறந்த பூட்டு ஒன்றின் படத்தை வலதுபக்க மேல்மூலையில் காட்டவுள்ளது. தவிர, encrypt செய்யப்படாத கணக்கிலிருந்து மின்னஞ்சலை நீங்கள் பெறும்போதும் அவ்வகையான அடையாளம் காட்டப்படவுள்ளது.

Encrypt செய்யப்படும் பட்சத்திலேயே மூன்றாவது தரப்பு ஒன்றினால் செய்தி களவாடப்படுவது பெருமளவு வீதத்தில் தடுக்கப்படுகிறது. ஜிமெயிலிருந்து ஜிமெயிலுக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் Encrypt ஆக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு கூகிளானது HTTPSக்கு மாறியிருந்தது. இந்நிலையில், வேறு மின்னஞ்சல் சேவை வழங்குநர்களால் அனுப்பப்படும் மின்னஞ்சல்களில் 57 சதவீதமானவை Encrypt செய்யப்பட்டிருந்ததாக கூகிள் கடந்த வருடம் தெரிவித்திருந்தது.

இது தவிர, மேலதிக கட்டணம் இல்லாமல் மேலதிகமாக 2GB இடத்தை கூகிள் ட்ரைவ்வில் வழங்கவுள்ளதாக தெரிவித்த கூகிள், இதனைப் பெறும் பொருட்டு, உங்களுடைய கூகிள் கணக்கிலுள்ள புதிய பாதுகாப்புச் சோதனையை பூர்த்தி செய்யவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனையானது, உங்கள் கணக்கை மீளப் பெறுவதற்கான தகவல்களை சோதிப்பது மட்டுமே ஆகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .