Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 30 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. பூமியில் இருந்து சுமார் 420 கிமீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அடிக்கடி விண்வெளி ஆய்வாளர்கள் சென்று ஆய்வு செய்து விட்டு திரும்புவது வழக்கம். இப்பணிகளை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கவனித்து வருகிறது.
இவ்வாறு விண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் சென்று பத்திரமாக திரும்ப அழைத்து வரும் பணியில் தனியாரை ஈடுபடுத்த நாசா முடிவு செய்தது. அதன்படி, முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கும் பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இதில் ஸ்பேஸ்எக்ஸ் தனது சோதனைகளை முடித்து, வீரர்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக அழைத்துச் சென்று வருகிறது.
ஆனால் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் பலகட்ட சிக்கல்களை சந்தித்தது. சோதனையிலும் நிறைய தடுமாற்றங்கள் வந்த நிலையில் ஒருவழியாக கடந்த ஜூன் 7ஆம் திகதி இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய 2 வீரர்களுடன் ஸ்டார்லைனர் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தது.
அடுத்த 8 நாளில் சுனிதா உட்பட 2 வீரர்களும் ஸ்டார்லைனர் மூலம் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலையில், விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டது. இதனால் இருவரும் மாத கணக்கில் விண்வெளியில் சிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வசம் நாசா ஒப்படைத்தது. அதன்படி கடந்த நேற்று க்ரூ டிராகன் 9 விண்கலம் ஏவப்பட்ட நிலையில், வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
4 hours ago