2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

சந்திரயான் 3 விண்கலம் : விண்ணில் பாய தயார்

Editorial   / 2023 ஜூலை 14 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கிய பயணத்தை இன்று (14) பிற்பகல் 2 மணி 30 நிமிடத்திற்கு தொடங்குகிறது.

நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் தொடங்கியது.

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து  விண்ணை நோக்கி பாய உள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் 'LVM 3 M-4 ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் நிறைவடைந்தன.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்திற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் நேற்று (13) மதியம் ஒரு மணிக்கு தொடங்கியது. கவுன்டவுன் முடிந்து சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, நாளை மதியம் 2:35 மணியளவில் ராக்கெட் விண்ணில் பாய்கிறது. நிலவுக்கு அனுப்பப்படும் 3வது விண்கலமான சந்திரயான்-3 விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .