2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

செவ்வாய்க்கிரகத்தில் புத்தர் சிலை

Gavitha   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படை தேவைகள் உள்ளனவா என்று ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மனிதனாமல் செவ்வாயக்கிரகத்தில் வாழ முடியுமா என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வுகளில், ஈடுபட்டிருக்கும் நாசாவின் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் ரோபோ அனுப்பும் புகைப்படங்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது.

அந்த வகையில் கியூரியாசிட்டி ரோவர், செவ்வாய் கிரகத்தின் பரப்புகளை அவ்வப்போது ஆய்வு செய்து புகைப்படங்களை அனுப்பி வருகின்றது. அதில், ஒரு படத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று இருப்பதாக வெளிநாட்டு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தின் மூலம், ஒரு அறிவார்ந்த வாழ்க்கை முறை, அங்கு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் இதனை நாசா நம்மிடமிருந்து மறைக்கப் பார்க்கிறது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புகைப்படத்தில் உள்ள பிரம்மாண்ட புத்தர் சிலையின் தலை  வலது பக்கமாக திரும்பி இருப்பதும் மார்பகங்கள் மற்றும் ஒரு பருமனான வயிறு, தோள்பட்டை போன்றவை தென்படுவதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. கிழக்காசிய கடவுளின் சிலையை வடிவமைத்து வழிப்பட்டு வந்த மக்களை இவர்கள் தற்போது தேடி வருகின்றனராம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .