2024 நவம்பர் 23, சனிக்கிழமை

சுவாரஷ்யமாக முடிவடைந்த Yarl IT Hubஇன் மே மாதக் கலந்துரையாடல்

Shanmugan Murugavel   / 2016 மே 30 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தை அடுத்த சிலிக்கன் பள்ளத்தாக்காக மாற்றும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட தன்னார்வலர் நிறுவனமான Yarl IT Hubஇற்கு கடந்த சனிக்கிழமை (28)  முக்கியமானதொரு நாளாய் அமைந்திருந்தது. அன்றைய தினம் காலையில் Yarl Geek Challenge ஜூனியர் போட்டிகளில் இவ்வருடம் பங்குபற்றும் மாணவர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு இடம்பெற்றிருந்ததுடன், மாலையில் பிரதான நிகழ்வான Yarl IT Hubஇன் மே மாதத்துக்கான சமூகக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணம், நல்லூரிலுள்ள தியாகி அறக்கொடை மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில், காலையில் இடம்பெற்ற Yarl Geek Challenge ஜூனியர் போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கில், எவ்வாறு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என விளக்கமளிக்கப்பட்டிருந்ததுடன், தமது தயாரிப்புக்களை மேம்படுத்தும் பொருட்டு, தொழில்நுட்பங்கள் பற்றி சில தொழில்நுட்ப அமர்வுகளும் நடாத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், அன்றைய தினத்தின் பிரதான நிகழ்வான Yarl IT Hubஇன் மே மாதத்துக்கான சமூகக் கலந்துரையாடலானது, Robotics பற்றிய ஒரு பேச்சு, Startup வாரயிறுதி பற்றிய அறிமுகம், கண்டுபிடிப்பு பற்றிய அறிமுகம், Speed IT Netஇன் கதை என நான்கு அமர்வுகளுடன் மாலையில் இடம்பெற்றிருந்தது.  

Mission ImPossible என்ற முதலாவது அமர்வானது, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியற்துறை இரண்டாம் வருட மாணவரான ஜதுஷனால் நடாத்தப்பட்டிருந்தது. இதில், Roboticsஐ தயாரிப்பது குறித்து அவர் பேசியிருந்ததுடன், Roboticsஐ தயாரிக்கும்போது பயன்படுத்தப்படுகின்ற அல்லது கருதப்படுகின்ற தொழில்நுட்பங்களைப் பற்றியும் கதைத்திருந்தார். தவிர, கலந்துரையாடலுக்கு முதல் அன்று காலையில் தயாரிக்கப்பட்ட இரண்டு Robotics பற்றியும் வந்திருந்தவர்களுக்கு விளக்கமளித்ததுடன், Arduinoவின் பயன்பாடு மற்றும் அதன் வினைத்திறன் பற்றியும் எடுத்துரைத்திருந்தார்.

அடுத்த இரண்டாவது அமர்வில், StartUp வாரயிறுதி என்ற நிகழ்வு தொடர்பான அறிமுகத்தை பிரஷாந்த் மேற்கொண்டிருந்தார். இதன்போது, குறிப்பிட்ட நிகழ்வில் என்ன இடம்பெறும் என்பது குறித்து அவர் விளக்கமளித்ததுடன், விரைவில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பங்குபற்றுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.

முக்கியமான மூன்றாவது அமர்வை, Yarl IT Hubஇனால் அழைப்பு விடுவிக்கப்பட்ட, தற்போது ஜேர்மனியில் வசிக்கும் பிரித்தானிய கண்டுபிடிப்பாளரான Jay Cousins, உலகை மாற்றும் யோசனைகள் என்ற தலைப்பில் ஆற்றுகையை நிகழ்த்தியிருந்தார். இதன்போது, அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருந்ததுடன்  ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

இறுதியாக, மென்பொருள் தயாரிப்புகள்,வலையமைப்புகளை தயாரித்து வழங்கும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட ஆரம்பகட்ட நிறுவனமான Speed IT Netஇன் கதையை தவரூபன் கூறியிருந்ததுடன், இந்த நிறுவனத்தை அமைப்பதற்கு தான் தாண்டி வந்த தடைகளைப் பற்றியும் கூறியிருந்தார்.

பின்னர், நிகழ்வு முடிவடையும் நிலைக்கு வந்தபோது, ஒவ்வொருவரும் தாம் விரும்பும் மற்றும் பணியாற்ற விரும்பும்புவவை தொடர்பாக கதைக்கும் ஊடாடும் சுவாரஷ்யமான அமர்வை Jay Cousins நடாத்தியிருந்தார். எனினும் பயன்தரக்கூடிய இதில், மாணவர்கள் உட்பட பலரும் இதில் பங்குபெறத் தயங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X