2024 நவம்பர் 23, சனிக்கிழமை

கூகுளின் ஏனைய அறிவிப்புகள்

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 06 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சான் பிரான்சிஸ்கோவில் இடம்பெற்ற நிகழ்வில், Pixel திறன்பேசிகளுக்கு மேலதிகமாக, வேறு நான்கு சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிகழ்வில், முதலில் உரையாற்றிய, கூகுளின் பிரதம நிறைவேற்றதிகாரி சுந்தர் பிச்சை, artificial intelligence-இல் கூகுள் அடைந்த முன்னேற்றத்தை கூறியிருந்தார்.

கூகுளினுடைய ஆராய்ச்சியின் பயனாக, புகைப்படங்களை, மேலும் தெளிவாக அடையாளங் காணுதல், இயந்திரங்களுடனான உரையாடல் எவ்வாறு மேம்பட்டுள்ளது, மொழிமாற்றத்தில் எவ்வாறு முன்னேற்றம் காணப்பட்டது என சுந்தர் பிச்சை விளக்கமளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, Pixel அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, Daydream View headset, Chromecast Ultra, Google Wifi, Google Home ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன.

Daydream VR platformக்கான கூகுளின் முதலாவது headsetடே Daydream View ஆகும். இது, Daydreamக்கு ஒத்துழைக்கக்கூடிய எந்தவொரு அலைபேசிக்கும் பொருந்தும். இதில், Google Street View, YouTube, Google Photos ஆகிய செயலிகள் காணப்படுகின்றன. இது, அடுத்த மாதம் விற்பனைக்கு வருவதுடன், அதன் விலை 79 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

இதேவேளை, HDR, Dolby Vision, 4kக்கு ஒத்துழைக்கக் கூடியவாறு Ultraவுடன் Chromecast இற்றைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முற்பதிவு, அடுத்த மாதம் ஆரம்பமாவதுடன், டிசம்பரில் இது விற்பனைக்கு வருகிறது. இதன் விலை, 69 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.

இது தவிர, பல முனை வலையமைப்புகளையுடைய routerகளான, Google Wifi என்றழைக்கப்படும் புதிய routerகளை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 129 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் என்பதுடன், இதன் முற்பதிவும் அடுத்த மாதம் ஆரம்பிப்பதுடன், எதிர்வரும் டிசம்பரில் சந்தைக்கு வருகிறது.

அடுத்து, திறன் வீடுகளுக்கான உதவியாளரான Google Home அடுத்த மாதம் நான்காம் திகதி விற்பனைக்கு வருவதுடன், இதன் விலையும் 129 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இது, கடந்த மே மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X