Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூன் 02 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்பிளின் ஐட்டியூன்ஸ் App Store ஆனது 1.5 மில்லியன் செயலிகளைக் கொண்டிருப்பதுடன், கூகுள் பிளே ஆனது இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட செயலிகளைக் கொண்டிருக்கின்ற போதும், நுகர்வோரின் சாதனங்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையான செயலிகளே நிறுவப்படுகின்றன.
வழமையான அடிப்படையில், சிறிய எண்ணிக்கையான மூன்றாந்தரப்பு செயலிகளுடனேயே மக்கள் ஈடாடுகையில், அலைபேசிச் செயலி பற்றியதானா புதிய ஆய்வொன்றில், நான்கிலொரு அலைபேசி பயனர்கள், ஒரு தடவையே செயலியைப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
37,000 பேரை பயனர்களாகக் கொண்டிருக்கின்ற ஆராய்ச்சி நிறுவனமான Localyticsஇன் தரவுகளின்படி, 2015ஆம் ஆண்டு 34 சதவீதமாகவிருந்த பயனர்களை தக்க வைக்கும் சதவீதமானது 2016ஆம் ஆண்டு சிறிது உயர்ந்து 38 சதவீதமாகக் காணப்படுகிறது.
எவ்வாறெனினும், மேற்படி தரவானது சிறிது அதிகரித்திருந்தாலும் இலக்கங்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. 62 சதவீதமான பயனர்கள், செயலியொன்றை 11 தடவைக்கு குறைவாகவே பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிப்பதோடு, இது நிலைத்திருக்கக் கூடிய வியாபார மாதிரி இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாட்களில் 23 சதவீதமானோர், செயலியை ஒரு தடவை பயன்படுத்துகின்றனர். இது, கடந்த வருடத்தினை விட முன்னேற்றம் என்ற போதும், மிகச் சிறிய முன்னேற்றமே ஆகும். 2014ஆம் ஆண்டில் 20 சதவீதமானோர் செயலிகளைக் கைவிட்டிருந்தனர்.
இதேவேளை, iOS இல் சிறிது முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த வருடம் 26 சதவீதமாகவிருந்த, ஒரு தடவை மாத்திரம் செயலியை பயன்படுத்துவோர் சதவீதம், இவ்வருடம், 24 சதவீதமாக குறைவடைந்துள்ளது. தவிர செயலிகளுக்கு, 11 அல்லது அதற்கு அதிகமாக திரும்புவோரின் எண்ணிக்கையானது, 2015ஆம் ஆண்டிலிருந்த 32 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், 15,000 தொடக்கம் 50,000 வரையான மாதாந்த இயங்குநிலைப் பயனர்களைக் கொண்டிருக்கின்ற, வளர்ச்சியில் மத்திய தரத்தில் உள்ள செயலிகள் உறுதியான வளர்ச்சியைக் கண்டுள்ளன. இந்தச் செயலிகள், push notifications, in-app messages, மின்னஞ்சல்களை பயன்படுத்துவதனாலேயே வளர்ச்சியடைந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago