2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஊசியே இல்லாத லேசர் சிரிஞ்ச்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 15 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெதர்லாந்தில் லேசர் தொழில்நுட்பத்தில், செலுத்தும் போது வலியே தெரியாத வகையில், ஊசியே இல்லாத சிரிஞ்சை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிரிஞ்சில் ஏற்றப்படும் மருந்து மில்லி செகண்டில் சூடாகி நீர்குமிழியாக மாறி, நோயாளி மீது தெளிக்கும் போது தோலில் உள்ள நுண் துவாரங்களிள் வழியாக உடலில் சென்று செயலாற்றும் எனவும்  அடுத்த 3 ஆண்டுகளில் இக்கண்டுபிடிப்பு பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சிரிஞ்ச் செலுத்துபவர்களுக்கு நுளம்பு கடிப்பதை விடவும்  மிகக் குறைந்தளவிலான உணர்ச்சியே ஏற்படும் என்றும், ஊசி செலுத்திக் கொள்ளத் தயங்குபவர்கள் இதனால் நன்மை அடைவார்கள் என்றும், மருத்துவக் கழிவுகளைக் குறைக்கும் வகையிலும் இந்த  சிரிஞ்ச் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X