Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Janu / 2024 மார்ச் 20 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலைதளங்கள் மற்றும் மென்பொருள்களை உருவாக்கும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு சேவை உருவாக்கப்படுகின்ற நிலையில் காக்னிஷன் என்ற நிறுவனம் டெவின் என பெயரிடப்பட்டுள்ள உலகின் முதல் ஏ.ஐ மென்பொருள் பொறியியலாளரை நிர்மாணித்துள்ளது .
இந்த சேவையிடம் நீங்கள் என்ன சொன்னாலும் அதனை சிறப்பாக செய்து முடித்துவிடும் எனவும் இதனை மனித பொறியியலாளர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை,மனித பொறியியலாளர்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது என காக்னிஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கடினமான பணிகளையும் சிந்தித்து, திட்டமிட்டு செய்து முடிப்பது , ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிவுகளை எடுப்பது, தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் நாளடைவில் சிறப்பாக தன்னை மேம்படுத்திக் கொள்வது என கிட்டத்தட்ட மனிதர்கள் மேற்கொள்ளும் பணிகளை சிறப்பாக செய்யும் ஆற்றல் கொண்டிருக்கிறது.
மென்பொருள் பொறியியல் துறையில் SWE-bench கோடிங் பென்ச்மாரக்கில் மென்பொருள்களை மதிப்பிடுவதில் டெவின் அதிநவீன தீர்வை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான பரிசோதனைகளின் போது எதிர்பார்த்ததை மிஞ்சும் வகையில் செயல்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிஜ உலகின் சவால்களின் போது டெவின், ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஏ.ஐ. மாடல்களை விட அதிகளவு சிறப்பாக செயல்பட்டுள்ளதுடன் , இது மென்பொருள் பொறியியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago