Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வர்கள், கம்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்களை தாக்கி செயலிழக்கச் செய்யவும், தகவல்களை திருடவும் மால்வேர் எனப்படும் நாசவேலை செய்யும் சாஃப்ட்வேர்கள் உருவாக்கப்படுகின்றன.
ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர் எடுத்துக்காட்டாக ஒன்றை சொல்லலாம், செக்கோஸ்லோவேயா நாட்டில் ஏராளமானோரின் வங்கிக் கணக்குகளில் தன்னிச்சையாக பணம் குறைந்துவந்ததை அடுத்து, அதன் பின்னணியில் ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரின் கைவரிசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனாளர்களின் அந்தரங்க தகவல்கள், வங்கி கணக்கு விவரங்களை திருடும் புதிய ஸ்ட்ராண்ட்ஹாக் (StrandHogg) மால்வேரிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.
குறிப்பாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், ஆண்ட்ராய்டின் அனைத்து பதிப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்திவரும் சுமார் 500 ஆப்களை இந்த மால்வேர் தாக்கி தகவல்களை திருடிவருகிறது.
போட்டோ, வீடியோ, மைக் போட்டோ, வீடியோ, மைக் வசதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஸ்ட்ராண்ட்ஹாக் மால்வேர், நமது அந்தரங்க தகவல்களை திருடவும், ஒட்டுக் கேட்கவும் ஹேக்கர்களுக்கு உதவுகிறது.
சத்தமின்றி கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கம் இதுபோன்ற மால்வேர்கள் கொண்ட ஆப்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் வளம் வருகிறது.
பயனர்களின் தகவல்களை சேகரித்து சீனாவில் உள்ள சர்வர்களுக்கு அனுப்பும் வகையிலான மால்வேர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள செயலியில் உள்ளதாக கூறி கூகுள் அது அனைத்தையும் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
ஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம் சுமார் 382 மில்லியன் பேர் டவுன்வோட் செய்துள்ள ஆப்களில் இந்த மால்வேர் இருப்பதை விபிஎன் ப்ரோ வலைப்பதிவு கண்டறிந்துள்ளது.
இதில் பெரும்பாலான ஆப்கள் சீன நிறுவனமான ஷென்ஜென் எச்.டபிள்யு.கே என்ற சீன நிறுவனம் அறிமுகப்படுத்தியவை.
இந்த ஆப்களுக்குள் உள்ளே நுழையும் போது பெர்மிஷன் அக்சப்ட் என்ற வார்த்தை கேட்கும் அதை என்னவென்று படிக்காமலே நாம் டிக் அடித்து அக்சப்ட் செய்து விடுவோம்.
ஆனால் இந்த பெர்மிஷன் கேட்கும் இடத்தின் சில வற்றில் மால்வேர் மற்றும் ரோக்வேர் கூட இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
முதலில் இலவச ட்ரையல் இந்த ஆப்களானது போன்களில் உள்ள சிக்கல்களை கண்டறிவது போல் அனைத்து ஆப்களிலும் நம்மிடம் அனுமதி வாங்கியே ஊடுருவும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முதலில் இலவச ட்ரையல் போல் செயல்பட்டு பின்னர் நம்மிடம் பணம் வாங்கியும் இந்த ஆப்கள் இயக்கப்படுகிறது என அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எந்தெந்த ஆப்களை அன்இன்ஸ்டால் செய்ய வேண்டும்?
World Zoo
Puzzle Box
Word Crossy!
Soccer Pinball
Dig it
Laser Break
Word Crush
Music Roam
File Manager
Sound Recorder
Joy Launcher
Turbo Browser
Weather Forecast
Calendar Lite
Candy Selfie Camera
Private Browser
Super Cleaner
Super Battery
Virus Cleaner 2019
Hi Security 2019
Hi VPN, Free VPN
Hi VPN Pro
Net Master
Candy Gallery
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .