2024 செப்டெம்பர் 08, ஞாயிற்றுக்கிழமை

’இறைச்சி அரிசி’ தயாரிப்பு

Editorial   / 2024 ஜூன் 17 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உள்ள விஞ்ஞானிகள் குழு, மாட்டிறைச்சி செல்கள் கலந்த புதிய அரிசி வகையை உருவாக்கியுள்ளது.

எதிர்காலத்தில் பல இறைச்சி பிரியர்களுக்கு அவர்களின் புதிய வகை அரிசி ஓர் அற்புதமான உணவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மாட்டிறைச்சியின் ஊட்டச்சத்து மதிப்பை இந்த அரிசியில் சேர்ப்பதில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த 'இறைச்சி அரிசி'யை எதிர்கால விண்வெளி நடவடிக்கைகளிலும், கிரக ஆய்வுகளிலும் எளிதில் தயாரிக்கக்கூடிய ஒரு வகையான சத்தான அரிசியாக அறிமுகப்படுத்துவார்கள் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த புதிய வகை அரிசி இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. இது வெண்ணெய் போன்ற வாசனை கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .