2024 செப்டெம்பர் 20, வெள்ளிக்கிழமை

“இரட்டை கோபுரத் தாக்குதல்” விண்வெளி புகைப்படத்தை வெளியிட்ட நாசா

Freelancer   / 2024 செப்டெம்பர் 12 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி பயணிகள் விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், இரட்டை கோபுரத்தின் மீது மோதி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நடந்த 18 நிமிடங்கள் இடைவெளியில் இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டடத்தின் மீது மற்றொரு விமானத்தை மோதச் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, இராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட 3 பகுதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் சுமார் 3,000 பேர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல், வரலாற்றில் நடந்த மிக மோசமான தாக்குதலாகும். இந்த தாக்குதல் தேசப்பாற்றாளர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 23ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, அமெரிக்காவின் விண்வெளி வீரர் பிராங்க் குல்பர்ட்சன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துள்ளார். அப்போது, தனது வேதனையை கடிதத்தின் மூலம் எழுதி அனுப்பியுள்ளார். 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 12 எனும் திகதியிட்ட கடிதத்தில், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் சம்பவம் குறித்து தனது துக்கத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த சமயத்தில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய, இந்தக் கடிதத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .